அமெரிக்காவிற்கு எதிராக.. ஈரானுடன் கைகோர்த்தது மேலும் ஒரு நாடு

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

அமெரிக்கா-ஈரான் இடையேயான பிரச்சனையில் ஈராக், ஈரானுக்கு ஆதரவாக நிற்கும் என ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அலி அல்ஹாக்கிம் தெரிவித்துள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அலி அல்ஹாக்கிம் மற்றும் ஈரான் வெளியுறுவுத்துறை அமைச்சர் முகம்மது ஜவாத் ஜரிப்பும் கலந்துக் கொண்டு பேசினர்.

அப்போது பேசிய ஈராக் அமைச்சர் முகமது அலி அல்ஹாக்கிம், ஈராக் ஈரானுக்கு ஆதரவாக நிற்கும். அண்டை நாடான ஈரான்- அமெரிக்கா இடையே ஒரு தூதுவர் போல் செயல்படவும் நாங்கள் தயாராக உள்ளோம். பொருளாதார தடை மீது ஈராக்கிற்கு நம்பிக்கை இல்லை.

அமெரிக்காவினால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதை நாங்கள் மிகவும் தெளிவாகவும் நேர்மையாகவும் சொல்கிறோம். ஈரான் நிலைப்பாட்டில் நாங்கள் நிற்கிறோம் என ஹாக்கிம் கூறினார். ஈராக்கின் இரு பிரதான தோழமை நாடுகளாக அமெரிக்காவும் ஈரானும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் வெளியுறுவுத்துறை அமைச்சர் முகம்மது ஜவாத் ஜரிப் பேசியதாவது, ஈரானுக்கு எதிரான எந்தவொரு போர்த் தாக்குதல்களுக்கும் எதிராக நாம் பாதுகாப்போம். அது பொருளாதார போராக இருந்தாலும் சரி, இராணுவ போராக இருந்தாலும் சரி. எங்கள் விலமையின் மூலம் இவற்றை எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்