அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வாக்கு வெறும் வெற்று வார்த்தை என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மெளசவி கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தை கைவிட ஒப்புக்கொண்டால் புதிய பேச்சுவார்த்தை முன்னெடுக்க தான் தயார் என கடந்த வியாழக்கிழமை டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கு இடம் என கூறி ஈரான் அதிரடியாக மறுத்தது.
இந்நிலையில், ஈரானின் மிகப்பெரிய மற்றும் இலாபகரமான பெட்ரோகெமிக்கல் குழுக்கு எதிராக அமெரிக்க புதிய பொருளாதாரத் தடை விதித்தது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மௌசவி வெளியிட்ட அறிக்கையில், ஈரான் பெட்ரோலிய துறை மீது அமெரிக்க விதித்துள்ள புதிய தடையின் மூலம், ஜனாதிபதி டிரம்பின் பேச்சுவார்த்தை வாக்கு வெறும் வெற்று வார்த்தை என நிரூபணமாகியுள்ளது என விமர்சித்துள்ளார்.
மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்