மரண தண்டனையிலிருந்து தப்பிய சிறுவன்... சவுதி அரசு முக்கிய முடிவு

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியா அரசுக்கு எதிராக நண்பர்களை திரட்டி போராடியதாக கூறி மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட இளைஞரை விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் சிறுபான்மையினரான ஷியா பிரிவினரை சேர்ந்த 13 வயது சிறுவன் Murtaja Qureiris, அரசுக்கு எதிராக நண்பர்களை திரட்டி போராடியதாக கூறி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் முர்தாஜாவுக்கு மரண தண்டனை விதித்து ஷரியா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது முர்தாஜா மீதான மரண தண்டனையை ரத்து செய்துள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்படுவார் எனவும் சவுதி அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முர்தாஜா கடந்த 2014 ஆம் ஆண்டு, தமது 13-வது வயதில் அரசுக்கு எதிராக ஆளைத் திரட்டி போராடியதாக கூறி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முர்தாஜா பொலிசார் மீதும் மருந்தகம் மீதும் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் சவுதி நிர்வாகம்,

2014 ஜனவரி மாதம் ஜேர்மனி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பலில் முர்தாஜாவும் ஒருவர் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

முர்தாஜா தமது 10-வது வயதிலேயே நண்பர்களை திரட்டி அரசுக்கு எதிராக போராடியதாக கூறும் சவுதி நிர்வாகம், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய பின்னரே, தற்போது மரண தண்டனையை ரத்து செய்துள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்