அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான முக்கிய காரணத்தை வெளியிட்டது ஈரான்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

அமெரிக்கா கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான காரணத்தை ஈரானிய விண்வெளிப் படையின் தளபதி கூறியுள்ளார்.

அமெரிக்கா கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகாரித்து வருகிறது.

இந்நிலையில், விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான காரணத்தை ஈரான் பிரிகேடியர் ஜெனரல் ஹாஜிசாதே வெளியிட்டுள்ளார். ஈரான் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, அமெரிக்காவின் இராணுவ விமானத்திற்கு எச்சரிக்கை விடுக்கவே ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பி-8 இராணுவ விமானத்தை திசை திருப்பவே அதன் அருகே பறந்த ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. பி-8 விமானத்தில் 35 பேர் இருந்ததாக கூறிய ஈரான் தளபதி, பி-8 விமானத்தை திசை திருப்பமாறும், இல்லையெனில் தாக்குதல் நடத்தப்படும் என இரண்டு முறை எச்சரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கா ஆளில்லா விமான பாகங்களின் புகைப்படத்தை ஈரான் வெளியிட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்