ஈரான் பதிலடி குறித்து பிரித்தானியா பயந்து நடுங்க வேண்டும்... மதகுரு எச்சரிக்கை

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானின் பதிலடி குறித்து பிரித்தானியா பயந்து நடுங்க வேண்டும் என ஈரானில் அதிகாரம் படைத்த ஷியா மதகுரு அமைப்பின் நிபுணர்கள் சபை உறுப்பினர் முகமது அலி மௌஸவி ஜசாயேரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜிப்ரால்டர் பகுதியில் வைத்து, போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு ஈரானிய கச்சா எண்ணெயை கொண்டு சென்ற கிரேஸ் 1 என்ற சூப்பர் டேங்கர் கப்பலை, பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் அதிகாரிகள் கூட்டாக சிறைபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஈரானிய ஷியா மதகுரு கூறியதாவது, நான் வெளிப்படையாகக் கூறுகிறேன், ஈரானிய எண்ணெய் டேங்கரை சட்டவிரோதமாக பறிமுதல் செய்வது தொடர்பாக ஈரானின் பதிலடி நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா பயப்பட வேண்டும்.

எங்களை அச்சுறுத்தினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்பதை காண்பித்துள்ளோம். அமெரிக்கா ஆளில்லா விமானத்திற்கு கொடுத்த வலுவான பதிலடி போல், சட்டவிரோத கப்பல் பறிமுதலுக்கும் ஈரான் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிரேஸ் 1 என்ற சூப்பர் டேங்கர் கப்பலை, அமெரிக்கா கோரியதால் தான் சிறைபிடித்தோம் என ஸ்பெயினின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers