சவுதி பிராந்தியங்களில் தாக்குதல் நடத்தி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குறித்து அரபு கூட்டுப்படை செய்தி தொடர்பாளர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமனில் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக சவுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
எனினும், சவுதி பிராந்தியத்தில் உள்ள கூட்டுப்படைகளையே குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இதை அரபு கூட்டுப்படை மறுத்துள்ளது.
ஹவுத்தி நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் சவுதி பிராந்தியத்தை தாக்குவதற்கு முன்பு தடுத்து நிறுத்தி அழிக்கப்பட்டதாக அரபு கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.
மேலும், சவுதி கூட்டுப்படையை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றோம் என கூறும் ஹவுத்தி கிளர்ச்சியளர்கள், சவுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் பொது வசதிகளை தொடர்ந்து குறிவைத்தே தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் முயற்சிகள் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் அதன் வழக்கமான விதிகளின்படி தொடர்ந்து எதிர்கொள்ளப்பட்டு நடுநிலைப்படுத்தப்படும் என்று அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்