ஐரோப்பியர்கள் தவறிவிட்டனர்..! அணுசக்தி ஓப்பந்தத்தில் அதிரடி முடிவெடுத்தது ஈரான்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

உலக சக்திகளுடனான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி யுரேனியத்தை செறிவூட்டு உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்கான தனது உறுதிப்பாட்டை மறு பரிசீலனை செய்யவுள்ளதாக ஈரானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி அறிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட அப்பாஸ் அராச்சி கூறியதாவது, ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் 3.6 சதவீதத்தை தாண்டும், இது 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாகும்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் முடிவெடுக்க மற்ற நாடுகளுக்கு போதுமான நேரத்தை ஈரான் வழங்கியுள்ளது. மேலும், ஈரான் அதன் கடமைகளை குறைப்பது ஒப்பந்தத்தின் மீறல் அல்ல. மேலும், கடமை குறைப்புக்கள் ஒவ்வொரு 60 நாட்களுக்கும் தொடரும் என கூறியுள்ளார்.

ஈரான், 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்க விரும்புகிறது, மற்ற நாடுகள் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அராச்சி கூறினார். பேச்சுவார்த்தைக்கு கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன, ஆனால் புதிய முயற்சிகள் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், அராக் ஹெவி வாட்டர் ரியாக்டர் வசதியை மீட்டெடுக்கும் திறனைக் கொண்டுள்ளது என்றும், இது தெஹ்ரானின் தேவைகளின் அடிப்படையில் செயல்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...