பிரித்தானியாவால் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பலை விடுவிக்குமாறு ஈரான் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியா கப்பல்கள் ஈரானிய கடலுக்குள் நுழையக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்துள்ளதால், பிரித்தானியாவுக்கு எதிராக ஈரான் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த வாரம், சிரியாவிற்கு ஈரான் எண்ணெய் எடுத்துச்சென்ற டேங்கர் கப்பலை பிரித்தானியா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்ற நிலை தொடங்கியது. பறிமுதல் செய்த கப்பலை விடுவிக்குமாறு ஈரான் கோரி வருகிறது.
இதுகுறித்து ஈரான் வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, இது ஒரு ஆபத்தான விளையாட்டு மற்றும் விளைவுகளைக் கொண்டுள்ளது.
டேங்கர் கப்பலை பிரித்தானியா கைப்பற்றியதற்கான சட்ட சாக்குப்போக்குகள் செல்லுபடியாகாது. டேங்கரை விடுவிப்பதே அனைத்து நாடுகளின் விருப்பமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்