வெளிநாட்டு எண்ணெய் கப்பலை அதிரடியாக சிறைபிடித்தது ஈரான்.. காரணம்?

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானின் துணை இராணுவ புரட்சிகர காவல்படை 12 பேர் கொண்ட குழுவுடன் எண்ணெய் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு வெளிநாட்டு எண்ணெய் டேங்கர் கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் லாரக் தீவின் தெற்கே ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் டேங்கர் தடுத்து நிறுத்தப்பட்ட பறிமுதல் செய்யப்பட்டதாக கூறியுள்ளது.கைப்பற்றப்பட்ட கப்பலை ஈரானின் அரசு தொலைக்காட்சி அடையாளம் காணவில்லை, ஆனால் அது ஞாயிற்றுக்கிழமை தடுத்து சிறைபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

எண்ணெய் டேங்கரில் 12 வெளிநாட்டுக் குழு உறுப்பினர்கள் இருந்ததாகவும், ஈரானிய கடத்தல்காரர்களிடமிருந்து வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு சுமார் 1 மில்லியன் லிட்டர் எரிபொருளை கடத்தலில் ஈடுபட்டதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட ஒரு எண்ணெய் டேங்கர் ஈரானிய பிராந்திய கடலில் கண்காணிப்பு கருவியில் இருந்து காணாமல் போனது. பனமேனிய-கொடியுடன் சென்ற ஐக்கிய அரபு எமிரேடஸ் எண்ணெய் டேங்கரான எம்டி ரியா ஞாயிற்றுக்கிழமை கஷ்ம் தீவுக்கு அருகே அதன் இருப்பிடத்தை அனுப்பும் கண்காணிப்பு கருவி நிறுத்தப்பட்ட நிலையில் காணாமல் போனது.

கடல்சார் போக்குவரத்தின் தரவுகளின்படி, டேங்கர் கடைசியாக தகவல் அனுப்பிய இடத்திற்கு அருகில் தான் ஈரான் புரட்சிகர காவல்படை தளம் உள்ளது என தெரியவந்துள்ளதாம். முன்னதாகவே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டேங்கரை ஈரான் சிறைபிடித்து இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது நினைவுக் கூரதக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers