ஹெலிகாப்டர்.. படகுகளால் பிரித்தானியா டேங்கரை சுற்றி வளைத்த ஈரான்: கைப்பற்றும் வீடியோவை வெளியிட்டது

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஹார்முஸ் ஜலசந்தியில் பிரித்தானியா எண்ணெய் டேங்கர் எவ்வாறு கைப்பற்றப்பட்டது என்பதைக் காட்டும் வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல்படை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. சர்வதேச கடல்வழி விதிகளை மீறிய குற்றத்திற்காக, ஹார்முஸ்கான் துறைமுகத்தின் கோரிக்கையை அடுத்து பிரித்தானியாவின் ஸ்டெனா இம்பீரோ டேங்கர் கைப்பற்றப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

குறித்த வீடியோவில், கருப்பு முகமூடி அணிந்திருக்கும் ஈரான் இராணுவத்தினர், ஹெலிகாப்டரிலிருந்து, பிரித்தானியா டேங்கர் கப்பலில் இறங்குகின்றனர்.

மேலும், ஈரானுக்கு சொந்தமாக பல சிறிய படகுகள், டேங்கரை சுற்றி வளைக்கின்றன. குறித்த வீடியோ இரண்டு கமெராக்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஒன்று படகிலிருந்தும் மற்றொன்று ஹெகாப்டரிலிருந்தும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு பிரித்தானியா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர், ஏனெனில் முக்கியமான கடல்வழிப்பாதையில் பதட்டங்களை அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers