எதையும் சந்திக்க தயார்: பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்

Report Print Vijay Amburore in மத்திய கிழக்கு நாடுகள்

பிரித்தானியா எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியதை தொடர்ந்து, உள்ளூர் அரசியலுக்காக தேவையில்லாத பதற்றத்தை இருநாடுகளுக்கு இடையிலும் அதிகரிக்க வேண்டாம் என ஈரான் எச்சரித்துள்ளது.

பிரித்தானியாவின் ஸ்டெனா இம்பீரோ எண்ணெய் கப்பலை கடந்த வெள்ளிக்கிழமையன்று ஈரான் கைப்பற்றியது.

இதனை "விரோதச் செயல்" என்று பிரித்தானியா கூறியதுடன், விபத்தில் சிக்கியதால் கப்பலைக் கைப்பற்றியதாக கூறிய தெஹ்ரானின் விளக்கத்தையும் நிராகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பிரித்தானியாவிற்கான ஈரான் தூதர் ஹமீத் பெய்தினெஜாட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " ஈரானுக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் இருக்கும் பதட்டத்தை கப்பல்களின் பிரச்சினைக்கு அப்பால் அதிகரிக்க விரும்பும் உள்நாட்டு அரசியல் சக்திகளை பிரித்தானிய அரசு கட்டுப்படுத்த வேண்டும். முக்கியமான நேரத்தில் இப்படி பதட்டத்தை அதிகரிப்பது மிகவும் ஆபத்தானது. இருப்பினும் ஈரான் எந்த அச்சுறுத்தல்களையும் சமாளிக்க தயாராக உள்ளது " என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers