பிரித்தானியா டேங்கருக்குள் சிக்கிய 23 பேரின் கதி என்ன? வெளியானது புகைப்படம்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானால் கைப்பற்றப்பட்ட பிரித்தானியா எண்ணெய் டேங்கர் கப்பலுக்குள் சிக்கிய 23 பேரின் நிலை குறித்து விவரிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சர்வதேச கடல்விழி விதிகளை மீறியதாக குற்றம்சாட்டி பிரித்தானியாவின் ஸ்டெனா இம்பீரோஸ் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது. கப்பலில் இந்தியார்கள் உட்பட 23 பேர் இருந்தனர்.

கப்பலில் இருந்து குழுவினர் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பதாக ஈரான் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கப்பலுக்குள் ஓராக 23 பேரும் தரையில் அமர்ந்து இருக்க, அவர்களிடம் ஈரான் அதிகாரி ஒருவர் பேசுகிறார். புகைப்படத்தில், 23 பேரின் காலணிகளும் குவியலாக விடப்பட்டுள்ளது.

நேற்று ஸ்டெனா இம்பீரோஸ் கப்பலில் இருந்த பிரித்தானியா கொடியை இறக்கிய ஈரான் அதிகாரிகள், ஈரான் கொடியை ஏற்றி உள்ளனர்.ஈரானின் நிலைப்பாடு பிரித்தானியா விட மிகவும் உறுதியானது என்று கூறியுள்ள ரஷ்யா, மத்திய கிழக்கில் ஈரானின் தரப்பை ஆதரப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்