ஈரான் உடனான போரில் பிரித்தானியா மண்ணை கவ்வும்..! இராணுவ பலம் ஓப்பீட்டில் வெளியான உண்மை

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரான், பிரித்தானியா இடையே பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இரு நாட்டின் இராணுவ பலம் ஓப்பீடப்பட்டுள்ளது.

மனிதவளம், நிலம் மற்றும் கடற்படை வலிமை மற்றும் பெட்ரோலிய வளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்தானியா மற்றும் ஈரானின் இராணுவ வலிமை ஒப்பீடப்பட்டுள்ளது.

குளோபல் ஃபயர் பவர் (ஜி.எஃப்.பி) என்ற வலைதளம், இந்த ஆண்டு தெஹ்ரான் மற்றும் லண்டனின் இராணுவ வலிமையை மதிப்பாய்வு செய்தது. இதுவரை ஆய்வு செய்த 137 நாடுகளில் ஈரான் 8வது மற்றும் பிரித்தானியா 14வது இடத்தைப் பிடித்தது.பவர்இண்டெக்ஸ் ஸ்கோர் (PwrIndx) எனப்படும் முழுமையான உள்நாட்டில் உருவாக்கப்பட்ட டேட்டாவை பயன்படுத்தி நாடுகளின் இராணுவ வலிமையை வலைத்தளம் மதிப்பிடுகிறது.

இராணுவ வலிமையின் ஒப்பீட்டின் படி, மனிதவளம், நிலம் மற்றும் கடற்படை வலிமை மற்றும் பெட்ரோலிய வளங்கள் ஆகியவற்றில் ஈரானை விட பிரித்தானியா பின்தங்கியிருப்பதைக் காட்டுகிறது. ஈரான் ஒரு பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளது, மொத்தம் நாட்டில் வாழும் மக்கள் 83 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆகும். பிரித்தானியாவில் 65,105,000.

இவர்களில், ஈரானில் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் இராணுவ சேவைக்கு தகுதியுடையவர்கள், இது மொத்த மக்கள் தொகையில் 48 சதவீதம். மறுபுறம், பிரித்தானியா அதன் குடியிருப்பாளர்களில் 36.8 சதவிகிதம் பேர் இராணுவ சேவைக்கு தயாராக இருப்பதாகக் கருதப்படுகிறது, மொத்தம் கிட்டத்தட்ட 24 மில்லியன் மக்கள்.

நாடுகளின் மொத்த ராணுவ வீரர்கள் முறையே ஈரானுக்கு 873,000 மற்றும் இங்கிலாந்துக்கு 233,000. பிரித்தானியாவின் 331 க்கு எதிராக 1,634 போர் டேங்கரைகளை தெஹ்ரான் வைத்திருக்கிறது, ஈரானின் நில வலிமை பிரித்தானியாவை விட உயர்ந்ததாக தோன்றுகிறது. ஈரானின் இராணுவ வலிமை பிரித்தானியாவிற்கு பதட்டமாக அமைந்துள்ளது.

ஈரான் விவகாரத்தில் பிரித்தானியாவில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள போரிஸ் ஜான்சன் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்