துபாய் அரசரின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணின இளவரசியின் நெருக்கமான ’நண்பர் ’ இவர்தான்!

Report Print Balamanuvelan in மத்திய கிழக்கு நாடுகள்

துபாய் அரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், அவரது ஆறாவது மனைவியாகிய ஹயா பிண்ட் அல் ஹுசைன், 31 மில்லியன் டொலர்களுடன் பிரித்தானியாவுக்கு தப்பியோடியதைத் தொடர்ந்து பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானார்.

ஆனால் அதற்கு முன் பல விடயங்களுக்காக புகழ் பெற்றிருந்தார் அவர். பிரித்தானிய மகாராணியாருடன் நல்ல நட்பு அவருக்கு உண்டு.

உலக அளவில் துபாயை வளர்ச்சி பெறச் செய்ததற்கு அவரே பொறுப்பு. குதிரைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், ஒரு அங்கீகரிக்கப்பட்ட கவிஞரும் ஆவார்.

அப்படி இருந்த ஷேக் முகமதுவின் ஆறாவது மனைவி, தனது பாதுகாவலர் ஒருவருடன் நெருக்கமான நட்பு வைத்தது, அவரது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அந்த நெருக்கம் குறித்து அறிந்த மூத்த ராஜ குடும்பத்தினர், இது முறையற்ற நெருக்கம் என விமர்சித்ததாக பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த நேரத்தில் கவிஞரான ஷேக் முகமது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு கவிதையை எழுதினார்.

அதில் ‘துரோகியே, விலை மதிப்பில்லாத நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டாய், உன் விளையாட்டு வெளியே தெரிந்துவிட்டது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது அந்த பாதுகாவலரின் பெயர் புகைப்படம் முதலான விடயங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

அவரது பெயர் Russell Flowers, அவர் ஒரு முன்னாள் பிரித்தானிய ராணுவ வீரர் ஆவார்.

Russellம் இளவரசி ஹயாவும் சேர்ந்து நேரம் செலவிடும் மாளிகையின் படமும் வெளியாகியுள்ளது.

அந்த மாளிகையின் அருகில் வசித்த Russell, கடந்த ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசி ஹயா Russellஉடன் நெருக்கம் காட்டியதையடுத்து அவரது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சியே இளவரசி ஹயா அரண்மனையிலிருந்து தப்பியோடியதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்