இனி ஆண்களின் அனுமதி தேவையில்லை.. சவுதி பெண்களின் கட்டுப்பாட்டை ரத்து செய்த அரசு!

Report Print Kabilan in மத்திய கிழக்கு நாடுகள்
134Shares

சவுதி அரேபிய பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணக் கட்டுப்பாட்டை, அந்நாட்டு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்து வந்தது. முகமது பின் சல்மான் அங்கு இளவரசராக பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, சவுதியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டன. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதி, கார் ஓட்ட பெண்களுக்கு அனுமதி போன்ற சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் தற்போது பெண்களுக்கான கட்டுப்பாடு ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்ல, தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் இருந்து வந்தது.

இந்த சட்டத்திற்கு உலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது சவுதி அரேபிய அரசு அச்சட்டத்தை ரத்து செய்துள்ளது. 21 வயதுக்குட்பட்ட பெண்கள் அனைவரும் இனி ஆண்களின் ஒப்புதல் இல்லாமலேயே பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல முடியும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம், இதுவரை இருந்து வந்த சவுதி பெண்களுக்கான வெளிநாட்டு பயண கட்டுப்பாடும் முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்