அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு பிரித்தானியா உடந்தை: ஐரோப்பியா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

அமெரிக்கா உலகில் தனியாக நிற்கிறது, டிரம்பால் வளைகுடாவில் கூட்டணியை உருவாக்க முடியாது என்று ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஸரீஃப் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்த ஜவாத் ஸரீஃப் கூறியதாவது, ஈரானின் உரிமைகளை பறிக்க அமெரிக்கா விரும்புகிறது. அரேபிய வளைகுடாவில் பதட்டத்திற்கு அமெரிக்கா தான் காரணம், இப்பிராந்தியத்தில் அதன் இருப்பு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

கடந்த மாதம் ஈரானிய எண்ணெய் டேங்கரை பிரித்தானியா கைப்பற்றியது கப்பற் கொள்ளை, பிரித்தானியா கூறியது போல கப்பல் சிரியாவிற்கு செல்லவில்லை என என்றும் அவர் கூறினார். அரேபிய வளைகுடாவின் கவனம் மற்றும் பாதுகாப்பிற்கு ஈரான் பொறுப்பு.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதத்திற்கு பிரித்தானியா உடந்தையாக உள்ளது என்றும், வளைகுடாவில் கடல்சார் குற்றங்கள் குறித்து ஈரான் ஒருபோதும் கண்களை மூடிக்கொள்ளாது என்றும் எச்சரித்தார்.

தேவைப்பட்டால் ஈரான் தனது 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறு முக்கிய உலக சக்தி நாடுகளுடன் கைவிடும் என கூறிய ஸரீஃப், 2015 உடன்படிக்கையை மீட்பதற்கான அவர்களின் முயற்சிகளை விரைவுபடுத்த ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து ஐரோப்பிய நாடுளுக்கும் அழைப்பு விடுத்தார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்