எண்ணெய் கப்பலா.. எங்களிடம் இல்லை..! பல்டியடித்த பிரித்தானியா: ஈரானின் பதிலடி எப்படி இருக்கும்?

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானிய எண்ணெய் டேங்கர் கிரேஸ் 1 செவ்வாயன்று பிரித்தானியாவில் இருந்து விடுவிக்கப்படும் என ஈரானிய செய்தி நிறுவன அறிக்கையை, ஜிப்ரால்டேரிய அரசாங்க மறுத்துள்ளது

சிரியாவிற்கு எண்ணெய் எடுத்துச் செல்வதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளை மீறியதாக சந்தேகத்தின் பேரில் பிரித்தானியா கடற்படையினர் யூலை 4 ம் திகதி பிரித்தானியா மத்தியதரைக் கடல் பகுதியான ஜிப்ரால்டரின் கடல் பகுதியில் வைத்து ஈரானின் கிரேஷ் 1 டேங்கரைக் கைப்பற்றினர். ஆனால், குறித்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது

இந்நிலையில், பிரித்தானியாவால் கைப்பற்றப்பட்ட ஈரானின் கிரேஸ் 1 டேங்கர் செல்வாய்க்கிழமை விடுவிக்கப்படும் என ஜிப்ரால்டர் அதிகாரி ஒருவர் கூறியதாக மேற்கோளிட்டு ஈரான் செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஆனால், ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை சரியானதல்ல, ஈரானின் கிரேஸ் 1 டேங்கர் கப்பல் விடுவிக்கப்படாது என்று ஜிப்ரால்டேரிய அராங்கத்தின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். அதேசமயம் நிலவி வரும் பதற்றத்தை குறைக்க ஜிப்ரால்டேரிய தரப்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஈரானிய எண்ணெய் டேங்கர் கிரேஸ் 1 தொடர்பான விசாரணைகள் ஜிப்ரால்டரின் விஷயம் என்று பிரித்தானியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேஸ் 1-ஐ பற்றி நடத்தப்படும் விசாரணைகள் ஜிப்ரால்டர் அரசாங்கத்தின் விஷயம் என்று பிரித்தானியா வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும், விசாரணை நடந்துகொண்டிருப்பதால், இதுகுறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் இந்த பதில் இருநாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்தள்ளதால், வளைகுடாவில் ஈரான் அடுத்தது என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்