பொதுமக்கள் முன்னிலையில்... சம்பவம் நடந்த இடத்திலேயே குற்றவாளியை தூக்கிலிட்டு கொன்ற ஈரான்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானில் மதகுருவை கொன்ற குற்றவாளி கொலை நடந்த இடத்திலேயே தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

தெற்கு நகரமான Kazeroun-வில் மதகுருவை கொன்ற குற்றவாளி என கண்டறியப்பட்ட Hamid Reza Derakhshandeh-ஐ ஈரான், பொதுவில் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

மே 29 அன்று மதகுருவைக் கொன்ற இடத்திலேயே Hamid Reza Derakhshandeh தூக்கிலிடப்பட்டார் என்று Fars மாகாணத்தின் தலைமை நீதிபதி Kazem Mousavi-யின் தீர்ப்பை மேற்கோள் காட்டி ஈரான் செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது

முஸ்லீம் புனித மாதமான ரமழான் மாதத்தில் ஒரு விழாவில் கலந்துக்கொண்டு திரும்பும் போது மதகுரு Mohammad Khorsand ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட Derakhshandeh-யிடம் நடந்த விசாரணையில், நீதித்துறை அதிகாரிகள் முன்னிலையில் திட்டமிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார் என தலைமை நீதிபதி Kazem Mousavi-யின் மேற்கோளிட்டுள்ளார்.

கொலை செய்ததற்காக வருத்தத்தை தெரிவிக்க மறுத்த கொலையாளியின் உயிரைக் காப்பாற்ற வேண்டாம் என்று மதகுருவின் குடும்பத்தினர் முடிவு செய்த பின்னர், Derakhshandeh-க்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

ஈரானிய சட்டத்தின் கீழ், கொலை செய்யப்பட்டவரின் குடும்பம், நஷ்டஈடாக பணத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் குற்றவாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்