ஈரான் உச்ச தலைவர் தான் இதற்கு முக்கிய காரணம்: உண்மைகளை வெளியிட்ட அந்நாட்டு ராணுவ தளபதி

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

பிரித்தானியாவின் கப்பல் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஈரானின் மூத்த ராணுவத் தளபதி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி யூலை மாதம் Strait of Hormuz-யில் பிரித்தானியா கொடியிடப்பட்ட எண்ணெய் டேங்கர் ஸ்டெனா இம்பெரோவைக் கைப்பற்ற உத்தரவிட்டார் என்று ஈரானின் மூத்த இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, யூலை மாதம் சர்வதேச பொருளாதார தடைகளை மீறி சிரியாவிற்கு எண்ணெய் எடுத்துச் செல்ல முயன்றதாக குற்றம்சாட்டி, பிரித்தானியா கடற்படையினர் ஈரானியி டேங்கர் கப்பலை கைப்பற்றினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரித்தானியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது.

இதுகுறித்து ஈரானின் விண்வெளிப் படைகளின் தளபதி அமீர் அலி ஹாஜிசாதே கூறுகையில், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி தான் பிரித்தானியா டேங்கரை கைப்பற்றும் உத்தரவை வழங்கினார்.

பிரித்தானியாவின் நடவடிக்கைக்கு கண்டிப்பாக பதிலளிக்காமல் இருக்ககூடாது என்று கமேனி கூறிய அடுத்த 48 மணி நேரத்திற்குப் பிறகு பிரித்தானியா கப்பல் கைப்பற்றப்பட்டது.

யூன் 24ம் திகதி அன்று அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட எட்டு ஈரானிய தளபதிகளில் ஒருவரான ஹாஜிசாதே, உச்ச தலைவர் வழங்கிய உத்தரவுகள் இவை என குறிப்பிட்டார். மேலும், மற்ற துறைகள் தொடர்பாகவும் இதேபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

பிரித்தானியாவில் கைப்பற்றப்பட்ட ஈரானிய கிரோஸ் 1 டேங்கர் சமீபத்தில் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்