வெளிநாட்டு சிறையில் வாடிய இந்தியர்... ரூ.60 லட்சம் செலவிட்டு காப்பாற்றிய முதியவர்: பின்னர் நடந்த துயரம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவில் ஆறு ஆண்டுகள் சிறையில் வாடிய இளைஞரை தொழிலதிபர் ஒருவர் பல லட்சம் செலவிட்டு காப்பாற்றிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சவுதி அரேபியாவில் சிறையில் வாடிய இந்திய இளைஞரை தொடக்கத்தில் பிணையில் வெளியே கொண்டு வந்ததும்,

பின்னர் சுமார் 60 லட்சம் ரூபாய் செலவிட்டு சிறையில் இருந்து காப்பாற்றியதும், இவர் பணியாற்றி வந்த குடியிருப்பின் முதியவர் என கூறப்படுகிறது.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜிதேஷ் என்ற இளைஞர், தமது திருமணம் முடித்து 11 மாதம் கடந்த நிலையில், சவுதி அரேபியாவில் சாரதி பணிக்கு சென்றுள்ளார்.

சவுதி முதியவர் ஒருவருக்கு சாரதியாக வேலையில் சேர்ந்த இரண்டாவது மாதம், ஜிதேஷின் வாகனம் மோதி, சவுதி நாட்டவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சவுதி நீதிமன்றம் ஜிதேஷுக்கு 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியதுடன், தவறினால் சிறை தண்டனைக்கும் விதித்தது.

உள்ளூர் முக்கிய நபரின் சாரதியாக ஜிதேஷ் பணியாற்றி வந்துள்ளதால், 90 வயதான அந்த நபரே பிணையில் இவரை வெளியே கொண்டு வந்துள்ளார்.

ஆனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜிதேஷ் மீண்டும் சிறை செல்ல நேர்ந்தது.

இதனிடையே அபராத தொகையை தாமே வழங்க முன்வந்த அந்த 90 வயது முதியவர், தொடர்புடைய ஆவணங்களிலும் அதை பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதனையடுத்து சிறையில் இருந்து விடுதலையான ஜிதேஷ் நேரிடையாக சென்று அந்த முதியவரிடம் நன்றி கூற மருத்துவமனை சென்றுள்ளார்.

ஆனால் வயது மூப்பு காரணமாகவும், சிகிச்சையில் இருப்பதாலும் அவரால் பேச முடியாமல் போனது.

இந்த நிலையில் அந்த இரவே முதியவர் மரணமடைந்த தகவல் வெளியானது. அந்த முதியவருக்கு சாரதியாக பணியாற்றி வந்தாலும், ஒரு தந்தையை போன்று அவரை ஜிதேஷ் பார்த்துக் கொண்டதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனாலையே அந்த முதியவர், அபராத தொகையை செலுத்த முன்வந்திருக்கலாம் என ஜிதேஷின் நண்பர்கள் கருதுகின்றனர்.

தற்போது நீண்ட ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் ஜிதேஷ் நாடு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்