ஈரான் சிறையில் 10 ஆண்டுகள்.. கொடுமை அனுபவிக்கும் பிரித்தானியா ஜோடியை காப்பற்ற கதறும் குடும்பங்கள்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தனியா-அவுஸ்திரேலிய பெண் மற்றும் அவரது வருங்கால கணவரின் புகைப்படம் முதன் முறையாக வெயாகியுள்ளன.

அவுஸ்திரேலிய-பிரித்தானியா நாட்டவர், சுற்றுலா blogger Jolie King மற்றும் அவரது அவுஸ்திரேலிய காதலன் Mark Firkin ஆகியோர் 10 வாரங்களுக்கு முன்பு, தலைநகர் தெஹ்ரானில் உரிமம் இல்லாமல் ட்ரோன் பறக்கவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜோடி ஈரானின் மிகவும் மோசமான Evin சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2017 அவுஸ்திரேலியாவில் இருந்து தங்களின் பயணத்தை தொடங்கிய இந்த ஜோடி, செய்திகளின் மூலம் மோசமான நாடுகளாக கருதப்படும் நாடுகளுக்கு சுற்றுலா சென்று, அதன் உண்மை மூகத்தை பதிவு செய்து சமூக ஊடங்களில் பகிர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஈரானுக்கு பயணம் மேற்கொண்ட ஜோடி, அங்கு டிரோன் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை குறித்து அறியாமல், டிரோனை பறக்கவிட்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 She was detained with her boyfriend Mark Firkin, allegedly for flying a drone without a licence
Credit: Facebook

உளவு குற்றச்சாட்டுகளின் பேரில் 2016 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 41 வயதான பிரித்தானியா-ஈரானிய நட்டவரான Nazanin Zaghari-Ratcliffe உள்ள அதே சிறையில் Jolie அடைக்கப்பட்டுள்ளார்.

பெயர் வெளியிடப்படாத இரண்டாவது பிரித்தானியா-அவுஸ்திரேலிய பெண்ணும் இதுபோன்று மற்றொரு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இந்த ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டு 10 வாரங்களுக்கு பிறகு Jolie-Mark-ன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அவர்ளை விடுவிக்க கோரி குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஈரானுடன் தொடர்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்