சவுதி அரேபியாவை வியப்பில் ஆழ்த்திய இளம்பெண்னுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்!

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் மேற்கத்திய உடை அணிந்து பலரது கவனதையும் ஈர்த்த இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரியாத்தில் கடந்த வாரம் பாரம்பரிய மேலங்கியை அணியாமல், மேற்கத்திய உடையுடன் வலம் வந்து அங்குள்ள பலரது கவனத்தையும் ஈர்த்தவர் 33 வயதான மஷேல் அல்-ஜலூத்.

பாரம்பரிய உடையை அணிய மறுக்கும் தமக்கு அலுவலகத்தில் இருந்து தற்போது மிரட்டல் விடுக்கப்படுவதாகவும்,

அல்லது வேலையை இஅழக்கும் சூழல் ஏற்படும் எனவும், சவுதி அரேபியாவில் பணியாற்ற முடியாமல் போகும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் கடந்த சில மாதங்களாக abaya எனப்படும் பாரம்பரிய மேலங்கியை அணிய மறுக்கும் குறிப்பிட்ட சில பெண்களில் ஜலூதும் ஒருவர்.

தற்போது இவர்களின் துணிச்சலான முடிவுகள் பல இளம் தலைமுறையினரை சிந்திக்க வைத்துள்ளது.

abaya எனப்படும் பாரம்பரிய மேலங்கி அணியும் வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

ஆனால் கடந்த சில 10 ஆண்டுகளாகவே இது கட்டாயமாக்கப்படுவதாகவும், கலாச்சார உடையாக மாற்றப்படுவதாகவும் இளம் தலைமுறையினர் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

கடந்த ஆண்டு பட்டத்து இளவரசர் சல்மான் சவுதி அரேபியாவில் உடைக்கட்டுப்பாடு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தும்,

இதுவரை அதை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கைகளும் அரசு சார்பாக முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையிலேயே ஜலூத் தலைநகர் ரியாத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மேற்கத்திய உடையுடன் வலம் வந்தார்.

பலர் அந்த இடத்தில் இது தொடர்பில் விவாதித்துள்ளதாகவும், சிலர் உக்கிரமாக தம்மை பார்த்ததாகவும் கூறும் ஜலூத்,

சிலர் பொலிசாருக்கு புகார் அளிக்க இருப்பதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது தமது அலுவலகத்தில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்