சவுதி மன்னரின் தனிப்பட்ட பாதுகாவலர் மர்மமாக சுட்டுக்கொலை: இளவரசரை தூரத்தும் கொலைப்பழி

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி மன்னர் Salman bin Abdulaziz Al Saud-வின் தனிப்பட்ட பாதுகாவலர் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி மன்னரின் பாதுகாவலர் ஜெனரல்Abdulaziz AlFaghem, அவரது நெருங்கிய நண்பரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சனிச்கிழமை, AlFaghem தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார், அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் நண்பர் AlFaghem-வை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நண்பரை அந்நாட்டு அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னையே இக்கொலைக்கான காரணம் என அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2002 ஆம் அண்டு முதல் மன்னர் குடும்ப பாதுகாவலராக பணியாற்றி வந்த AlFaghem, 2017ஆம் ஆண்டு உலக கல்வி அமைப்பால் உலகிலே சிறந்த பாதுகாவலர் என கௌரவிக்கப்பட்டார்.

arabic.sputniknews.com

சில தினங்களுக்கு முன் AlFaghem-ஐ பாதுகாவலர் பணியில் இருந்து இளவரசர் முகமது பின் சல்மான் நீக்கியதாக கூறப்படுகிறது. பத்திரிக்கையாளர் கஷோகியை கொன்ற காவலளிகளை AlFaghem கண்காணித்தது இளவரசருக்கு அச்சுறுத்தலாக அமைந்தது எனவும் கூறப்படுகிறது.

இதுபோல், AlFaghem கொலை தொடர்பில் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்