உலக நாடுகளுக்கு சவூதி இளவரசர் விடுத்த எச்சரிக்கை!

Report Print Vijay Amburore in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானைத் தடுக்க உலகம் செயல்படாவிட்டால், எண்ணெய் விலைகள் "கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில்" உயரக்கூடும் என்று சவூதி இளவரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மிகப்பெரிய எண்ணெய் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தெக்ரான் தான் காரணம் என கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக சவூதி, ஈரான் மீது குற்றம் சுமத்தியது.

மேலும், சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் உலகப் பொருளாதாரத்தை அழித்துவிடும் என்று முகமது பின் சல்மான் கூறினார்.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதில் தன்னுடைய பொறுப்புகள் சில இருப்பதாகவும், ஆனால் தனிப்பட்ட முறையில் உத்தரவிடவில்லை என்றும் கூறினார்.

பின்னர் எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து பேசுகையில், "ஈரானைத் தடுக்க உலகம் ஒரு வலுவான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எண்ணெய் விநியோகம் சீர்குலைந்து, எண்ணெய் விலைகள் நம் வாழ்நாளில் நாம் காணாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் உயரும்."

மத்திய கிழக்கு பிராந்தியமானது "உலகின் எரிசக்தி விநியோகத்தில் சுமார் 30%, உலகளாவிய வர்த்தக பத்திகளில் 20%, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% என அங்கம் வகிக்கிறது.

"இந்த மூன்று விஷயங்களும் நிறுத்தப்படுவதை கற்பனை செய்து பாருங்கள். இதன் பொருள் சவூதி அரேபியா அல்லது மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தின் மொத்த சரிவு" என்று இளவரசர் கூறியுள்ளார்.

முன்னதாக செப்டம்பர் 14 ஆம் திகதி அப்கைட் மற்றும் அராம்கோவில் உள்ள நாட்டின் இரண்டு எண்ணெய் நிலையங்கள் மீது 18 ட்ரோன்கள் மற்றும் ஏழு கப்பல் ஏவுகணைகள் வீசப்பட்டதாக சவுதி அரேபியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனை யேமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாகவும் குற்றம் சுமத்தியது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்