ஈரான்-ஈராக் இடையே போர் மூள எதிரிகள் சதிதிட்டம்: உஷார்ப்படுத்திய உச்ச தலைவர் அலி கமேனி

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையில் ‘எதிரிகள் முரண்பாட்டை விதைக்க முயல்கின்றனர்’ என்று ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி திங்களன்று தெரிவித்தார்.

இறைவன் மற்றும் அன்பின் பெயரால் ஈரான்-ஈராக் இரு நாடுகளும் ஒன்றியைக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் இந்த உறவு வலுப்பெற்று வருகிறது.

எதிரிகள் இருநாடுகளுக்கு இடையில் கருத்து வேறுபாட்டை விதைக்க முற்படுகிறார்கள், ஆனால் அவர்கள் தோல்வியுற்றனர், அவர்களின் சதி பலனளிக்காது என்று கமேனி ட்விட்டரில் தெரிவித்தார்.

ஈராக்கில் சமீபத்தில் நடந்த வன்முறைகளுக்கு உச்ச தலைவர் ஏதிர்வினையாற்றியதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஈராக்கில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்ததில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், இறந்தவர்களில் பெரும்பாலோர் தோட்டாக்களால் தாக்கப்பட்டனர்.

நாசகாரர்கள் மற்றும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் போராட்டக்காரர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஈராக் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வன்முறை தொடர்பாக ஈராக் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ள தனது குடிமக்கள் பயணத்தை தள்ளி வைக்குமாறு ஈரான் தவலியுறுத்தியுள்ளது.

தெஹ்ரான் பாக்தாத்துடன் சிக்கலான உறவுகளைக் கொண்டுள்ளது, எனினும், ஈராக்கின் ஷியைட் அரசியல் குழுக்களிடையே ஈரானுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது.

1980 முதல் 1988 வரை இரு நாடுகளும் மோசமான போரை நடத்தியதுடன், 2003-ல் ஈராக் மீதான அமெரிக்கத் தலைமையிலான தாக்குதலில் மூத்த தலைவர் சதாம் உசேன் கொல்லப்பட்ட பின்னர் நாட்டில் ஈரானின் செல்வாக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்