இழப்பீடாக பெற்ற லட்சங்கள்... சடலத்தை ஏற்க மறுத்த குடும்பம்: வெளிநாட்டில் தமிழருக்கு ஏற்பட்ட துயரம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
398Shares

மொத்தம் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்ற பின்னர் குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட தமிழரின் சடலத்தை சவுதி அரேபியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை சேர்ந்த 47 வயதான கந்தசாமி ஆண்டியப்பன் மரணமடைந்துள்ளார்.

உடல் நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த கந்தசாமி, ஊருக்கு திரும்ப தயாரான நிலையில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

சவுதி நாட்டவரின் கீழில் பணியாற்றி வந்த கந்தசாமி ஆண்டியப்பன் மருத்துவமனையில் மரணமடைந்த நிலையில் அவரது சடலத்தை ஊருக்கு அனுப்பும் நடவடிக்கைகள் நடந்தேறும்போது குடும்பத்தினர் கந்தசாமி ஆண்டியப்பனின் மரணத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மட்டுமின்றி உடற்கூறு ஆய்வு உள்ளிட்ட ஆவணங்கள் கேட்டு சவுதி நாட்டவருக்கு எதிராக புகாரும் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த சவுதி நாட்டவர் இந்திய பண மதிப்பில் 4 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். ஆனால் பணம் கைவசப்படுத்திய பின்னர், தாங்கள் சடலத்தை கைப்பற்றும் நிலையில் இல்லை எனவும்,

சவுதியில் நல்லடக்கம் செய்து கொள்ளவும் வலியுறுத்தி அங்கு பணியாற்றும் இஸ்மாயில் என்ற தமிழரிடம் இந்த விவகாரத்தை ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே சவுதியில் சடலத்தை புதைக்க சட்ட சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, தற்போது அங்குள்ள அதிகாரிகளின் உதவியுடன் சவுதியின் அஜீர் பகுதியில் கந்தசாமி ஆண்டியப்பனின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்