ஈரான் மீது ரகசிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா.. சவுதி எண்ணெய் நிறுவன தாக்குதலுக்கு பதிலடி

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி எண்ணெய் நிறுவனங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது ரகசிய தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 14ம் திகதி சவுதியின் இரண்டு எண்ணெய் நிறுவனங்கள் மீது மர்ம டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி குழு பொறுப்பேற்றது.

ஆனால், சவுதி, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகள் ஈரான் மீது குற்றம்சாட்டியது. ஈரான் தான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தது.

இந்நிலையில், சவுதி அரம்கோ தாக்குதலுக்கு பின்னர் ஈரான் மீது ரகசியமாக சைபர் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் தனது சிந்தாந்தத்தை பரப்புவதற்கான திறனை கண்டறிவதை இலக்காகக் கொண்ட இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், உயிரிழப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்காமல் பதிலடி கொடுப்பதற்கான வழியாக கருதப்படுகிறது என்று அமெரிக்கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், ஈரான் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் சைபர் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்காவின் பென்டகன் மறுத்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்