வெளிநாட்டில் பிறந்தநாளன்று 12 வயது இந்திய சிறுமிக்கு நேர்ந்த துயரம்: கதறும் குடும்பம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் அதுதாபியில் 12 வயதேயான இந்திய வம்சாவளி சிறுமி தனது பிறந்தநாளன்று சுருண்டு விழுந்து இறந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜி சாக்கோ. இவரது 12 வயது மகளே தனது பிறந்தநாளன்று சுருண்டு விழுந்து இறந்தவர்.

அபுதாபியில் கடந்த 20 ஆண்டுகளாக குடியிருக்கும் ஷாஜி குடும்பம் சிறுமி மஹிமா சூசன் இறப்பால் அதிர்ச்சியில் உள்ளனர்.

நீண்ட நாட்களாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த சிறுமி மஹிமா, திடீரென்று சுருண்டு விழுந்து இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தை அடுத்து உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறுமியின் உடலை பதப்படுத்தும் சிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,

தொடர்ந்து சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்