2 குழந்தைகள் உட்பட 173 தூக்கிலிட்டு கொன்ற ஈரான்.. வெளிச்சத்திற்கு வந்த கொடூரம்: ஆழ்ந்த கவலையில் ஐ.நா

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானில் 2019ம் ஆண்டு இதுவரை இரண்டு சிறுவர்கள் உட்பட 173 பேருக்கு அந்நாட்டு அரசு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஐ.நா. சுயாதீன மனித உரிமை நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐ.நா பொதுச் சபையின் மனித உரிமைகள் குழுவிடம் ஐ.நா. சுயாதீன மனித உரிமை நிபுணர் ஜாவித் ரெஹ்மான் கூறுகையில், மனித உரிமை சட்டத்தின் படி 18 வயதுக்குட்பட்ட எவருக்கும் மரண தண்டனையை வழங்க உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் ஏழு சிறுவர் குற்றவாளிகளை கடந்த ஆண்டு தூக்கிலிட்டது என்றும், இந்த ஆண்டு இதுவரை இரண்டு குழந்தைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது என ரெஹ்மான் கூறியுள்ளார்.

நம்பகமான தகவல்கள் இருப்பதாக கூறிய ஜாவித் ரெஹ்மான், ஈரானில் இப்போது குறைந்தது 90 சிறுவர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

ஈரானில் மரண தண்டனையை ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்துவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ரெஹ்மான், இந்த எண்ணிக்கை 2017-ல் 507 ஆக இருந்தது, கடந்த ஆண்டு 253 ஆக குறைந்திருந்தாலும், ஈரானின் மரணதண்டனை விகிதம் ‘உலகின் மிக உயர்ந்த ஒன்றாகும்’ என்று அவர் கூறினார்.

இதுவரை 2019 ஆம் ஆண்டு மதிப்பீடுகளின் படி, ஈரானில் 173 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன என்று ரெஹ்மான் கூறினார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்