ராணுவ வீரர்கள் குறித்து தவறாக பரப்பப்படும் படங்கள்.. வெளிச்சத்திற்கு வந்த துருக்கியின் கேவலமான செயல்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

வடக்கு சிரியாவில் துருக்கி ராணுவ படைகள் தாக்குதலைத் நடத்தி வரும் நிலையில், ஒரு சில சமூக ஊடக பயனர்கள் துருக்கி ராணுவ வீரர்களை நல்லவர்கள் போல் சித்தரித்து தவறான புகைப்படங்களை சமூக வலைதளங்கிளல் பரப்பி வருவதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

துருக்கி ராணுவ வீரர்கள் சிரிய குழந்தைகளை கட்டிப்பிடிப்பது, அல்லது உணவளிப்பது போன்ற படங்களை் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், அந்த படங்கள் எதுவும் உண்மையில் வடக்கு சிரியாவில் நடந்து வரும் தாக்குதலை பிரதிபலிக்கவில்லை என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அந்த புகைப்படங்களில் இருப்பவர்கள் துருக்கி ராணுவ வீரர்களே இல்லை. அவை எதுவும் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை. பிற நாடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, சர்வதேச சமூகத்தில் துருக்கி செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டு பரப்படுகிறது.

துருக்கியை பிரபலப்படுத்தும் தவறான பதிவுகள், குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளின் ஒருங்கிணைந்த தொடர்பிலிருந்து பரப்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ட்விட்டர் கணக்குகள் தவறான புகைப்படங்களை பிரபலமான ஹாஷ்டேக்குகள் மற்றும் ரீட்வீட் மூலம் வைரலாக்கி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளன.

(AP) 2010 பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட புகைப்படம்

முன்னதாக, சிரியாவில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் படைகளை திரும்பப் பெற்றதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

(AP) 2015 சிரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்

ஆனால், அதற்கு பின்னர் வடக்கு சிரியாவில் குர்திஷ் தலைமையிலான படைகளுக்கு எதிராக துருக்கி ராணுவ வீரர்கள் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இந்த படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்