ஈரான் சதிதிட்டம்... பிரித்தானியா, பிரான்ஸை எச்சரிக்கத் தவறிவிட்டது கத்தார்: அமெரிக்கா ஊடகம் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

மே மாதத்தில் ஓமான் வளைகுடாவில் ஈரான் நான்கு கப்பல்களைத் தாக்கும் என்று கத்தார் முன்பே அறிந்திருந்த போதும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸை எச்சரிக்கத் தவறிவிட்டது என்று அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

பிரத்தியேகமாக அறிக்கை ஒன்றை பெற்றுள்ளதாய குறிப்பிட்டுள்ள ஃபாக்ஸ் நியூஸ், அதன் மூலம் இரண்டு சவுதி டேங்கர்கள், ஒரு நோர்வே டேங்கர் மற்றும் மே 12 அன்று எமிராட்டி துறைமுகமான புஜைரா அருகேஐக்கிய அரபு எமிரேட் கப்பல் ஆகியவற்றுக்கு எதிரான உடனடி தாக்குதல் குறித்து கத்தார் அறிந்ததாக தெரிவித்துள்ளது.

புஜைரா துறைமுக தாக்குதல்களுக்கு ஐ.ஆர்.ஜி.சி-குட்ஸ் படைகள் கடற்படை பிரிவு தான் காரணம் என்று நம்பத்தகுந்த புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன, மேலும் ஈரானின் உள்ளுர் அரசாங்கத்தின் கூறுகளும், கத்தாரும் ஐ.ஆர்.ஜி.சியின் செயல்பாடுகள் குறித்து அறிந்திருந்தன என தெரியவந்துள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் கண்டறிந்துள்ளது.

தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, அமெரிக்காவின் உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி, நான்கு டேங்கர்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கான அனைத்து தடைகளையும் திரும்பப் பெற்ற பின்னர் இந்த தாக்குதல் நடந்தது.

சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய அரபு நாடுகள் கத்தாரை புறக்கணிக்கத் தொடங்கிய 2016 முதல் கத்தார் ஈரானுடனான உறவை அதிகரித்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) உறுப்பினர்களை ஆதரிப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதாகவும், ஊக்குவிப்பதாகவும் கத்தார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்