மத்திய கிழக்கில் போருக்காக அமெரிக்கா இதுவரை செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் போருக்காகவும் இராணுவ தளங்களை பராமரிக்கவும் மட்டும் அமெரிக்கா இதுவரை செலவிட்ட தொகை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக்கிய தலைநகர் பாக்தாதில் ஈரானிய தளபதி குவாசிம் படுகொலைக்கு பின்னர் அமெரிக்காவுடன் லேசான மோதல் போக்கில் ஈராக் இருந்து வருகிறது.

மட்டுமின்றி தங்கள் நாட்டில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என்ற ஈராக்கிய பாராளுமன்ற பிரேரணைக்கு இதுவரை அமெரிக்கா மதிப்பளிக்கவில்லை.

இந்த நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் போருக்காக செலவிட்டுள்ள தொகை தொடர்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வெளியிட்டுள்ளது.

இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட பின்னர் போருக்காக மட்டும் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் பொதுமக்கள் வரிப்பணத்தில் மொத்தம் 6.4 டிரில்லியன் டொலர்களை அமெரிக்கா செலவிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இருந்து படிப்படியாக இராணுவத்தை வெளியேற்றுவோம் என டிரம்ப் அரசாங்கம் உறுதி அளித்திருந்தும்,

தற்போதைய ஆய்வுகளின்படி மத்திய கிழக்கில் 60,000 முதல் 70,000 அமெரிக்க இராணுவத்தினர் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், டிரம்ப் அரசாங்கம் உறுதியான ஒரு முடிவை அறிவிக்க தயக்கம் காட்டுவதால், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத்தின் பங்களிப்பு நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.

மேலும் ஈராக்கில் மட்டும் 6,000 அமெரிக்க இராணுவத்தினர் அங்குள்ள முக்கிய தளங்களில் பணியாற்றி வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அமெரிக்காவின் 200,000 இராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்