2,500 ஆண்டுகளுக்கு முந்தை சவப்பெட்டியை கண்டுபிடித்தது எகிப்து!

Report Print Karthi in மத்திய கிழக்கு நாடுகள்

எகிப்தில் சில தினங்களுக்கு முன்னதாக கண்டு பிடிக்கப்பட்ட 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சவப்பெட்டியைத் தொடர்ந்து தற்போது 80க்கும் அதிகமான புதிய சவப்பெட்டிகளை அந்நாட்டு தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது.

2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட வண்ணமயமான, சீல் செய்யப்பட்ட கலசங்களின் தொகுப்பை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததாக சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் முஸ்தபா மட்பௌலி மற்றும் சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சர் காலித் எல்-அனானி இப்பகுதியில் சுற்றுப்பயணம் செய்து புதிய கண்டுபிடிப்பை நேற்று ஆய்வு செய்தனர்.

எகிப்தின் கெய்ரோவுக்கு தெற்கே அமைந்துள்ள சக்காரா என்கிற பகுதியில் ஜோசரின் படி பிரமிடு உள்ளது. இது ஒரு பரந்த புதைகுழி வளாகமாக உள்ளது.

இந்த பீடபூமியில் ஸ்டெப் பிரமிட் உட்பட 11 பிரமிடுகள் உள்ளன, அவற்றுடன் நூற்றுக்கணக்கான பண்டைய தளங்கள் பல உள்ளன. இது கிமு 2920-2770 காலகட்டத்தினை சேர்ந்ததாக கருதப்படுகின்றது.

கொரோனா தொற்று காலகட்டத்தில் எகிப்திய சுற்றுலாத்துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது புதிய அழ்வாராச்சிகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டு புதிய தொல்லியல் இடங்களை கண்டறிந்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று எங்கள் புதிய கண்டுபிடிப்புகளை தடுத்துவிடாது என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

பண்டையக் காலங்களில் அரசர்கள் மத குருக்கள் என மதிப்பு மிக்க நபர்களின் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்