பிரான்ஸ் அதிபரை சாடிய துருக்கி அதிபருக்கு கடும் எதிர்ப்பு: தூதரைத் திரும்பப்பெற்றது பிரான்ஸ்!

Report Print Karthi in மத்திய கிழக்கு நாடுகள்
355Shares

துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், பிரான்ஸ் அதிபரின் மன நிலை குறித்து விமர்சனம் செய்திருப்பது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிரான்ஸில் மாணவர்களுக்கு முகமது நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தினை காண்பித்ததற்காக ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன், இஸ்லாமிய பயங்கரவாதத்தினை கண்டித்ததுடன் பிரான்ஸ் "எங்கள் கேலிச்சித்திரங்களை விட்டுவிடாது" என்றும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து துருக்கி அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் துருக்கிக்கான பிரான்ஸின் தூதர் ஆலோசனைகளுக்காக திருப்பி அழைக்கப்படுவதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் வட்டார அதிகாரிகள் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் image credit: REUTERS

மேலும், "அதிபர் எர்டோகனின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அதிகப்படியான மற்றும் முரட்டுத்தனமானவை. எர்டோகன் தனது கொள்கையின் போக்கை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம், ஏனெனில் இது ஒவ்வொரு விஷயத்திலும் ஆபத்தானது" என்று அந்த அதிகாரி மேற்கோளிட்டுள்ளார்.

இது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

ஈரோட்கன் ஒரு இஸ்லாமிய பக்தர். அவருடைய இஸ்லாமிய மதக் கட்சியான ஏ.கே கட்சி 2002 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து துருக்கியின் பிரதான அரசியலுக்கு இஸ்லாத்தை நகர்த்த முயன்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லை என்பதால், முகமது நபிகளுக்கு ஒரு உருவத்தினை கொடுப்பதே குற்றமாக கருதப்படுகின்றது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்