ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. தஹ்ரிர் சதுக்கத்தில் கூடிய மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இது 2003-ல் சதாம் உசேனின் மறைவுக்கு பின்னர் நடைபெறும் மிகப்பெரிய அளவிலான போராட்டமாகும்.
தலைநகர் பாக்தாத் மற்றும் ஈராக்கின் ஷியா தெற்கில் அடிப்படை சேவைகள், வேலை வாய்ப்புகள் மற்றும் ஊழலுக்கு முடிவு என மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலகட்டடத்தில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அவர்களுடைய கோரிக்கைகளாக வேலையின்மை சிக்கலுக்கு தீர்வு காணுதல், ஊழலை ஒழித்தல் அரசியல் சீர்திருத்தம் போன்றவற்றை இருந்து. இந்த போராட்டங்களின் போது சுமார் 600 போராட்டக்காரர்கள் அரசு அடக்குமுறை காரணமாக உயிரிழந்துள்ளனர். மற்றும் ஆயிரக்கணக்கானோர் பல மாதங்களாக ஏற்பட்ட மோதல்களில் காயமடைந்தனர்.
இந்த போராட்டங்கள் அப்போதைய பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டன. அவருக்குப் பின் அல்-காதிமி, தனது இடைக்கால அரசாங்கத்தின் திட்டங்களில் எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளை ஒருங்கிணைப்பதாக உறுதியளித்தார். ஆனால், இன்றும் ஈரானில் மூன்றில் ஒரு இளைஞருக்கு வேலையில்லாத சூழல் நிலவுகின்றது.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஓராண்டு கழிந்த நிலையில் தற்போது மீண்டும் போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போன பத்திரிக்கையாளர்கள் குறித்து விசாரணையை மேற்கொள்ள அல்-காதிமி உறுதியளித்தார், ஆனால் இன்றுவரை இந்த விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்