நியூசிலாந்தில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் மக்கள் 2021 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று வானவேடிக்கைகளை கண்டுகளித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் பிரம்மாண்ட வாண வேடிக்கைகள், வண்ணமயமான ஒளி அலங்காரங்கள் செய்யப்பட்டு புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, ஹொங்ஹொங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் புத்தாண்டை கொண்டாடும் வகையில் 33 வகையான வானவேடிக்கைகளை இடம்பெற செய்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்