ஸ்மார்ட் கைப்பேசி விற்பனை - சாதனை படைத்தது Huawei

Report Print Givitharan Givitharan in மொபைல்
ஸ்மார்ட் கைப்பேசி விற்பனை - சாதனை படைத்தது Huawei

அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக விளங்கும் நிறுவனங்களுள் ஒன்றாக Huawei காணப்படுகின்றது.

இந்த நிறுவனம் இவ் வருடத்தின் முதல் காலாண்டில் ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

இதன்படி குறித்த காலப்பகுதியில் சுமார் 28.3 மில்லியன் ஸ்மார்ட் கைப்பேசிகளை விற்பனை செய்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது கடந்த வருடம் இதே காலப் பகுதியில் விற்பனை செய்த ஸ்மார்ட் கைப்பேசிகளின் எண்ணிக்கையை விடவும் 64 சதவீதம் அதிகமாகும்.

ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் காலடி பதித்து சில வருடங்களே ஆன நிலையில் இவ்வாறு அதிகளவு கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டது கைப்பேசி பிரியர்கள் மத்தியல் குறித்த நிறுவனத்திற்கான வரவேற்பினை எடுத்துக்காட்டுகின்றது.

இதேவேளை இவ்வருட முடிவில் 140 மில்லியன் கைப்பேசிகளை விற்பனை செய்வதற்கு Huawei நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த இந்த எண்ணிக்கையானது கடந்த வருடம் விற்பனை செய்யப்பட்ட கைப்பேசிகளின் எண்ணிக்கையிலும் 30 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments