ஆப்பிள் ஐபோன்கள் வெடிக்கிறது! தொடர்ந்து புகார்கள் எழுவதால் சிக்கல்

Report Print Fathima Fathima in மொபைல்

சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்கள் வெடித்து சிதறுவதாக புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் அதன் உற்பத்தியை நிறுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

இந்நிலையில் ஆப்பிள் iPhone 7-யும் வெடித்து சிதறுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் சீனாவில் நபர் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது போன் வெடித்ததாக புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் தனது காருக்குள் வைக்கப்பட்டிருந்த போன் வெடித்ததாக நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

எனினும் iPhone தான் வெடித்து சிதறியது என்பதற்கான உறுதியான தகவல்கள் வெளிவராத போதிலும், இதற்கு முன்னதாக தன் பக்கெட்டில் வைத்திருந்த போது உருகிய நிலையில் iPhone-யை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

சாம்சங்-கை தொடர்ந்து ஆப்பிள் போன்களுக்கும் இதுபோன்ற புகார்கள் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments