அப்பிளின் நயவஞ்சகத்தனம் அம்பலம்

Report Print Givitharan Givitharan in மொபைல்

தரம்வாய்ந்த கணணி மற்றும் மொபைல் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என உலகளாவிய ரீதியில் பெயர்பெற்ற நிறுவனமாக அப்பிள் விளங்குகின்றது.

எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்தி ஒன்று அப்பிள் நிறுவனத்தின் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது.

அதாவது ஐபோன் பாவனையாளர்கள் தமது கைப்பேசியின் ஊடாக மேற்கொள்ளும் அழைப்புக்கள் தொடர்பான விபரங்களை அப்பிள் நிறுவனம் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அதிர்ச்சி தகவலை ரஷ்யாவில் செயற்பட்டு வரும் Elcomsoft எனும் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி நான்கு மாதங்கள் வரையான தொடர்பாடல் தகவல்களை iCloud ஒன்லைன் சேமிப்பகத்தில் சேமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செயற்பாடானது iOS 8 மற்றும் அதன் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளங்களில் செயற்படும் ஐபோன்களில் உடாக மேற்கொள்ளப்படுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு iCloud வசதியினை முடக்கி (Disable) வைக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments