போலியான ஐபோனை கண்டறிய சூப்பர் டிப்ஸ்

Report Print Meenakshi in மொபைல்

தரத்திலும் தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கும் ஐபோனை வாங்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் ஆசை.

தற்போது இணையத்தில் வரும் ஐபோன் விற்பனைக்கான விளம்பரங்களைப் பார்த்ததும் அதனை வாங்கி விடுவதில் காட்டும் ஆர்வத்தினை அது அசலா போலியா என அறிவதில் காட்டுவதில்லை.

ஐபோனில் காணப்படும் சில மாற்றங்களை வைத்து அது அசலா போலியா என அறியலாம்.

ஆப்பிள் லோகோ (Apple Logo)

போலி ஐபோன்களில் ஆப்பிள் லோகோ சற்று வித்தியாசமாக இருக்கும். இதனை வைத்து அது உண்மையானதா போலியா என அறியலாம்.

ஸ்ருக்கள்(Screw)

சாதாரண ஸ்ரூக்கள்(screw) பயன்படுத்தப்பட்டிருந்தால் அது போலி.ஐபோன்களில் பெண்டா லோப் ஸ்க்ரூக்களே பயன்படுத்தப்பட்டிருக்கும்.

எக்ஸ்டெர்னல் மெமரி(External Memory)

எக்ஸ்டெர்னல் மெமரிக்காக ஐபோன்களில் தனியாக நாம் மெமரி கார்டினை பயன்படுத்த முடியாது. இதனை வைத்து கண்டறியலாம்.

சார்ஜிங் போர்ட்டினை சுற்றி பிளாக் பார்டர் இருந்தால் அது போலிக்கான அடையாளமே.

கேமரா (Camera)

கேமராவின் தரம்குறைவாக இருந்தால் அது போலி ஐபோன்.

இதைப்போல் போனை ஆன் செய்ததும் ஓரிஜினல் ஐபோன் என்றால் ஆப்பிள் லோகோ வரும். போலியானவற்றில் வெல்கம் என வரும்.

ஐஎம்இஐ நம்பர் (IMEI Number)

ஜெனரல் செட்டிங்ஸ் பகுதியில் ஐஎம்இஐ நம்பரைப் பார்க்கலாம். இதனை ஆப்பிள் தளத்திலும் உறுதிப்படுத்திக் கொள்ள இயலும்.

ஆப்பிள் ஸ்டோர் மற்றும் பேக்கெஜிங் (Apple store and Packaging)

ஆப்பிள் ஸ்டோருக்கான தளம் ஓப்பன் ஆகவில்லை என்றால் அது கண்டிப்பாக போலியாகும்.

பேக்கேஜிங்ல் ஐபோன் தயாரிக்கப்பட்ட இடம், ஐபோன் மாடல், சீரியல் நம்பர் போன்றவற்றை சரியாகக் கொண்டிருக்கும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments