நோக்கியாவின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
171Shares
171Shares
lankasrimarket.com

முன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான நோக்கியா தற்போது அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றமை தெரிந்ததே.

இந்நிலையில் விரைவில் தனது மற்றுமொரு புதிய அன்ரோயிட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

Nokia 8 எனும் இக் கைப்பேசியானது இம் மாதம் 13 ஆம் திகதி ஜேர்மனி மற்றும் அவுஸ்திரேலியாவில் முதன் முறையாக அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

இக் கைப்பேசியானது 5.3 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தவிர Snapdragon 835 Processor,பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் தலா 13 மெகாபிக்சல்களை உடைய டுவல் கமெரா மற்றும் 13 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3,090 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது Android 7.1.1 Nougat இயங்குதளத்தில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இதன் விலையானது 690 டொலர்கள் ஆக காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்