உலகளாவிய ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டது Samsung Galaxy Note 8

Report Print Givitharan Givitharan in மொபைல்
135Shares
135Shares
lankasrimarket.com

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் வழமை போன்று ஐபோன் கைப்பேசிகளுக்கு சவால் விடும் வகையில் இம்முறையும் தனது புதிய கைப்பேசியினை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Samsung Galaxy Note 8 எனும் குறித்த கைப்பேசியினை 42 நாடுகளில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இவற்றுள் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சிங்கப்பூர், கொரியா உட்பட மேலும் பல நாடுகள் அடங்கும்.

இதேவேளை அடுத்துவரும் சில வாரங்களுக்குள் இக் கைப்பேசியினை மேலும் பல நாடுகளில் அறிமுகம் செய்யவுள்ளதாக சாம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப் புதிய கைப்பேசியானது ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள ஐபோன்களிலும் விலை குறைவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்