வீட்டில் இருக்கும்போது கைப்பேசியை தானாக அன்லாக் செய்ய வைப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in மொபைல்
88Shares
88Shares
lankasrimarket.com

ஸ்மார்ட் கைப்பேசிகளை வீட்டில் இருக்கும்போதே அதிக அளவில் பயன்படுத்துவோம்.

எனினும் பாதுகாப்பு கருதி லாக் செய்யப்பட்டிருக்கும் கைப்பேசிகளை மீண்டும் மீண்டும் அன்லாக் செய்து பயன்படுத்தும்போது அசௌகரியமாக இருக்கும்.

இதனால் வீட்டில் இருக்கும்போது தானாகவே அன்லாக் செய்யும் வசதியினை கைப்பேசிகளில் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த வசதியானது Android 5.0 Lollipop இயங்குதளப் பதிப்பில் நேரடியாக தரப்பட்டுள்ளது. இதனை செயற்படுத்துவதற்கு Settings பகுதிக்கு செல்ல வேண்டும்.

அங்கு Security என்பதை தெரிவு செய்து தொடர்ந்து Smart Lock இனை தெரிவு செய்ய வேண்டும். இப் பகுதியில் காணப்படும் Trusted Places என்பதில் வீட்டின் மேப்பினை தெரிவு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் ஒவ்வொரு தடைவையும் வீட்டில் இருக்கும்போது கைப்பேசி தானாகவே அன்லாக் செய்யப்படும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்