Moto G5S Plus கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்
59Shares
59Shares
lankasrimarket.com

Motorola நிறுவனம் ஆனது தனது மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கணவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் Moto G5S Plus எனும் குறித்த கைப்பேசியினை எதிர்வரும் 29ம் திகதி அன்று முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.

இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 625 Processor, பிரதான நினைவகமக 4GB RAM, 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் Android 7.1 Nougat இயங்குதளத்தில் செயற்படும் இக் கைப்பேசியில் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3000 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் விலையானது 230 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்