iPhone X விடவும் iPhone 8 ஐ வாங்குவது சிறந்தது என்பதற்கான 9 காரணங்கள்

Report Print Givitharan Givitharan in மொபைல்
323Shares
323Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனமானது கடந்த வாரம் தனது 3 புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

iPhone 8, iPhone 8 Plus மற்றும் iPhone X ஆகிய குறித்த கைப்பேசிகளின் விலையானது முறையே 699 டொலர்கள், 799 டொலர்கள் மற்றும் 999 டொலர்களாக காணப்படுகின்றது.

எனினும் iPhone X கைப்பேசியானது குறைந்த அளவிலேயே மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகின்றது.

iPhone X கைப்பேசியில் காணப்படும் பல அம்சங்கள் iPhone 8 கைப்பேசியிலும் காணப்படுகின்ற அதேவேளை iPhone X ஆனது விலை அதிகமானதாக இருக்கின்றது.

எனவே iPhone X வாங்குவதனை விடவும் iPhone 8 வாங்குவது சிறந்ததாகும்.

மூன்று வகையான கைப்பேசிகளிலும் A11 எனும் ஆப்பிளின் புதிய புரோசசரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

iPhone 8 கைப்பேசிகளில் Touch ID தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால் iPhone X இல் Face ID பயன்படுத்தப்பட்டுள்ள,

Face ID ஆனது பரீட்சியம் குறைந்ததால் அதனை கையாள்வது கடினமாக காணப்படுகின்றது.

மூன்று வகையான கைப்பேசிகளும் Qi வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் ஒரே வேகத்தில் சார்ஜ் ஆகக்கூடியதாக இருக்கின்றது.

மூன்று வகையானது கைப்பேசிகளும் ரியர் கமெராக்களை கொண்டுள்ளன.

புதிய சில வசதிகளைக் கொண்ட வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெராவினை மூன்று வகையான கைப்பேசிகளும் உள்ளடக்கியுள்ளன.

iPhone 8 கைப்பேசியின் மேற்பக்கமானது iPhone X ஐ போன்று அருவருப்பான தோற்றத்தினை கொண்டிராமை.

விலை வித்தியாசம் மிகவும் அதிகம். அதாவது ஏறத்தாழ 200 தொடக்கம் 300 டொலர்கள் வரை வித்தியாசம் காணப்படுகின்றது.

முன்னைய iPhone 7 கைப்பேசிகளின் வெளிப்புற கேஸ் (Cases) ஆனது iPhone 8 உடன் பொருந்துகின்றமை. இதனால் தேவைப்படின் கேஸினை மாற்றிக்கொள்ள முடியும்.

iPhone X இனை விடவும் iPhone 8 கைப்பேசிகளே அதிகளவில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றமை போன்றவற்றினை குறிப்பிடலாம்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்