ஆப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சி வெற்றியளிக்குமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்
81Shares
81Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனமானது அண்மையில் தனது iPhone 8 கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

இவற்றில் இரு வகையான கைப்பேசிகளில் OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினை உள்ளடக்கியிருந்தது.

அதேபோன்று அடுத்து வரும் வருடங்களிலும் OLED திரையினைக் கொண்ட ஐபோன்களே அறிமுகம் செய்யப்படும் என அறிவித்திருந்தது.

எனினும் இதில் சில மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்து வருகின்றது.

அதாவது அடுத்த வருடமும் ஒன்றிற்கு மேற்பட்ட வகையான ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் LCD திரையினைக் கொண்ட கைப்பேசிகளையும் அறிமுகம் செய்ய எண்ணியுள்ளது.

இதற்காக LCD திரைகளை முற்று முழுதாக ஜப்பானில் இருந்து பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

இத்திரைகள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்