இரு வகையான Galaxy S9 கைப்பேசிகளை வடிவமைத்து வருகின்றது சாம்சுங்

Report Print Givitharan Givitharan in மொபைல்
178Shares
178Shares
Seylon Bank Promotion

சாம்சுங் நிறுவனம் அண்மையில் Samsung Galaxy Note8 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசியானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில் Galaxy S9 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் சாம்சுங் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

இக் கைப்பேசியானது இரு பதிப்புக்களாக வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இவ்விரு கைப்பேசிகளும் எச் சிறப்பியல்பில் வேறுபடுகின்றது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அடுத்த வருடமே இக் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படும் என்பதால் இவற்றின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாவதற்கு சில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்