இந்தியாவில் அறிமுகமாகும் Mi Mix 2 ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
14Shares
14Shares
lankasrimarket.com

Xiaomi நிறுவனம் கடந்த மாதம் Mi Mix 2 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை சீனாவில் அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்து வைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இக் கைப்பேசியானது 5.9 அங்குல அளவு, 2160 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 8GB RAM, 64/128/256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3,400 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் விலையானது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 15,000 ரூபாய்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்