வழமைக்கு மாறான திரையுடன் அறிமுகமாகும் Mate 10 Pro கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
105Shares
105Shares
Seylon Bank Promotion

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Huawei ஆனது Mate 10 Pro எனும் புதிய கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் இக் கைப்பேசி தொடர்பான சில தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதன்படி குறித்த கைப்பேசியின் திரையானது 18:9 எனும் விகித அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் Kirin 970 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 4,000 mAh உடைய நீடித்து உழைக்கக்கூடிய மின்கலம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

எதிர்வரும் 16ம் திகதி இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ள போதிலும் இதன் சிறப்பம்சங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்