புதிய கைப்பேசி அறிமுகத்தில் அதிரடி மாற்றத்தினை செய்தது பிளாக்பெரி

Report Print Givitharan Givitharan in மொபைல்
108Shares
108Shares
Seylon Bank Promotion

பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் அடங்கிய கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும் நிறுவனமாக பிளாக்பெரி திகழ்கின்றது.

இந்நிறுவனம் முன்னர் பிளாக்பெரி இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசிகளை அறிமுகம் செய்துவந்த போதிலும் அண்மைக்காலமாக அன்ரோயிட் கைப்பேசிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது.

இதேபோன்று Krypton எனும் புதிய கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால் தற்போது BlackBerry Motion எனும் பெயரில் குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Full HD திரை, Qualcomm Sanpdragon Processor என்பனவற்றினை உள்ளடக்கியதாக இக் கைப்பேசிகள் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இவற்றின் மேலதிக சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்